• Dec 26 2024

பக்கத்து வீட்டுப் பெண் ஸ்வீட்டுடன் கொடுத்த ஷாக் நியூஸ்! ஆடிப்போன பாக்கியா குடும்பம்? ஜெனிக்கு இது தேவை தான்... ராதிகாவுக்கு புது உறவு?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றை தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், வீட்டிற்கு வந்த பாக்கியாவிடம் கோட்டில் என்ன நடந்தது என ராமமூர்த்தி, இனியா, கோபி கேட்க, நடந்தவற்றை சொல்லுகிறார். மேலும், தனக்கு மினிஸ்டர் தந்த வாய்ப்பை சொல்லி சந்தோசப்படுகிறார்.


மறுபக்கம், ஜெனியின் குழந்தைக்கு பெயர் வைக்க முடிவு எடுத்துள்ளார் ஜெனியின் அப்பா. அப்போது, இது தப்பு என சொல்ல, நானும் செழியனும் பாப்பாக்கு வேற பெயர் வைக்க முடிவு பண்ணினோம் என சொல்ல, அவரது அப்பா கேட்கவே இல்லை.


இன்னொரு பக்கம், மினிஸ்டர் கொடுத்த ஆர்டெரை பற்றி சக வேலையாட்களிடம் சொல்லி, பிளான் போடுகிறார்.


இதை தொடர்ந்து, பாக்கியாவின் வீட்டிற்கு ராதிகாவின் பெரியப்பா மகனும் மனைவியும் கல்யாண பத்திரிகை எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அங்கு வந்து ராதிகாவிடம் நலம் விசாரித்துவிட்டு, பாக்கியா யார் என கேட்க, இது என் பொண்ணு என ராமமூர்த்தி சொல்கிறார்.


பாக்கியா வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர், ஜெனி எங்க என கேட்க, பாக்கியா சமாளிக்கிறார். அப்போது செழியன் அங்கு வர, ஜெனியின் குழந்தைக்கு பெயர் வைக்க சர்ச்சில் அறிவித்ததாக அனைத்தையும் சொல்லிவிட்டு செல்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி கோவப்பட்டு, ஜெனி வீட்டுக்கு செல்ல, அனைவரும் அவரை தடுக்கின்றார்கள்.



Advertisement

Advertisement