• Dec 27 2024

ஊசி போட்டு ஹீரோயினாக முயற்சி பண்ணினேன்,கடைசில இப்பிடி ஆகிட்டுது- சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்தாலும் டிஆர்பியில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

சீரியலின் கதைப்படி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்த ஸ்ருதியையும் ரவியையும் வீட்டு அழைத்து கொண்டு வந்து விட்டார் விஜயா. இருந்தாலும் ஸ்ருதி மாமனார் மற்றும் மாமியாரின் பேச்சைக் கேட்பதாக இல்லை.இதனால் இனி விஜயாவின் வீட்டில் என்ன என்ன பிரச்சினை நடக்கப்போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இந்த தொடரில் விஜயாவின் தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பாக்யஸ்ரீ. தமிழில் தேவியின் திருவிளையாடல் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார்.அப்படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

 இவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 14 வயதில் சினிமாவிற்கு வந்தேன், என்னுடைய உடம்பை கொஞ்சம் குண்டாக்குவதற்காக ஊசி எல்லாம் போட்டேன்.காரணம் அப்போதெல்லாம் நடிகைகள் கொஞ்சம் குண்டாகத் தான் இருப்பார்கள், வாய்ப்பு கிடைக்கும் என ஊசி போட்டு உடல் எடையை அதிகரித்தேன். பின் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணமும் நடந்தது.


அப்போது நடிக்க ஊசி போட்ட விளைவு என்னுடைய கர்ப்ப காலத்தில் தெரிந்தது. ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் ஊசி போட்டு குண்டானேன் என சோகமான விஷயத்தை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement