• Dec 26 2024

உங்கள கட்டிப்பிடிக்கணும்.! துல்கர் சல்மானை பார்த்து கதறியழுத யுவதி! நடந்த சுவாரசியம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் துல்கர் சல்மான். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மகன் ஆவார். மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து வருகின்றார். இதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளியான சீதாராம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் உள்ள பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்ததோடு எமோஷனல் ரீதியாகவும் பாதித்திருந்தது.


இதை தொடர்ந்து வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்துள்ளதோடு இந்த படம் தீபாவளிக்கு விருந்தாக ரிலீசாக உள்ளது. இதனால் இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உள்ளார் துல்கர் சல்மான்.

இந்த நிலையில், துல்கர் சல்மானை மேடையில் பார்த்த பெண் ரசிகை ஒருவர் அவரைப் பார்த்து கண்கலங்கி அழுததோடு அவரை கட்டிப்பிடிக்க வேண்டும் என்று தனது ஆசையையும் கூறி உள்ளார். இதை அடுத்து துல்கர் சல்மான் குறித்த பெண் ரசிகையை அழைத்து அவருக்கு ஆறுதல் கூறி அணைத்து கொண்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement