அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த "டிராகன்" திரைப்படம் வசூலில் அசுர வெற்றி பெற்றுள்ளது. ரூ. 80 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் திரையரங்கில் வெற்றிபெற்றுள்ள நிலையில் இப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த கயாடு லோஹர் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
இவர் "டிராகன்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதற்கு முன், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து அனுபவம் பெற்றிருந்த அவர் இந்த படத்தில் பல்லவியாக நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் ரசிகர்களின் அன்பும், பாராட்டுகளும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு, "எனக்கு எப்படி தொடங்குவது என தெரியவில்லை, திரையரங்கில் எனக்கு நீங்கள் அடிக்கும் விசிலாகட்டும், இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதையெல்லாம் பார்க்கம் போது சந்தோஷமாக உள்ளது.நீங்கள் கொடுக்கும் அன்பு விலைமதிப்பற்றது, இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி தருவேன், உங்களை பெருமைப்பட வைப்பேன் " என கூறி ரசிகர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
Listen News!