தனுஷ் தற்பொழுது நடிப்பை தாண்டி படங்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார். பவர் பாண்டி , ராயன் வரிசையில் சமீபத்தில் இவர் இயக்கி வெளியாகியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஓரளவு வரவேற்பினை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இவர் இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படம் ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது குறித்த தேதியில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம் வெளியாகவுள்ளமையினால் இப் படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் அளவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதைவிட தனுஷ் ,ரஷ்மிக்கா மந்தனா ,நடிப்பில் தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படம் 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது. இப் படம் பெப்ரவரி மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் இப்பொழுது ஜூன் 20 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளனர்.
Listen News!