• Dec 26 2024

இதெல்லாம் புரிஞ்சா சரி, அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை- தினேஷிற்கு எதிராக ரச்சிதா போட்ட பதிவு

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பலர் அருமையாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இருப்பவர் தான் தினேஷ்.இவர்  பிரிவோம் சந்திப்போம், புது கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம் என தொடர்ந்து விஜய் மற்றும் ஷு தமிழ் சீரியல்களில் நடித்து வந்தார்.

பின் இடையில் இவர் எந்த தொடரும் கமிட்டாகவில்லை, இவர் தன்னுடைய மனைவி ரச்சிதாவைப் பிரிந்து வாழுகின்றார்.இதனால் இருவருக்குள்ளும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகின்றது. 


இதனால் நேற்றைய தினம் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4வது இடத்தையும் பெற்றார்.அத்தோடு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


ஆனால் ரச்சிதா அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று உறுதியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.இந்நிலையில் தற்போது 'புரிஞ்சா சரி.. நோ மீன்ஸ் நோ' என குறிப்பிட்டு இன்ஸ்டாவில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவிட்டு இருக்கிறார் ரச்சிதா.தினேஷ் அந்த அளவுக்கு ரச்சிதாவிடம் நடந்துகொண்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement