• Dec 26 2024

வின்னர் அறிவிச்சதும் வெளில வந்திட்டேன்,விசித்ரா செம கடுப்பில இருக்கிறார்- கொந்தளித்த வனிதா விஜயகுமார்

stella / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று ஜனவரி 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இனிதே முடிவடைந்தது. பிரபல நடிகை VJ அர்ச்சனா இந்த சீசனின் வெற்றியாளராக தேர்வாகினார். 

மேலும் இந்த சீசனில் மணி சந்திரா மற்றும் மாயா அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுக் கொண்டனர்.மேலும் டைட்டில் வென்றதன் மூலம் அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி வனிதா விஜயகுமார் ரிவியூ கொடுத்து வந்தார்.அவர் அர்ச்சனாவுக்கு எதிராகவே தன்னுடைய கருத்துக்களை எப்போதும் கூறி வந்தார். இந்த நிலையில் கடைசி ரிவியூ நிகழ்ச்சியில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். 

இதுகுறித்து வனிதா பேசும் போது, அர்ச்சனா ஜெயிச்சது என்னால் நம்பவே முடியவில்லை. ஜனநாயகம் இல்லை பணநாயகம் தான் வென்றது. இரண்டுமே விஜய் டிவி பிராடக்ட் தான். இதில் மாயா பெயரை யூஸ் செய்து குரோஷி மற்றும் புகழ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.கமல் சாரிடம் மன்னிப்பு கேட்டவர்கள். ஏன் மாயாவிடம் கேட்கவில்லை? இதை என்னிடம் அவர்கள் நேரில் மாட்டும் போது கேட்பேன். 


ஒரு பொண்ணு பத்தி பேசுறது சரியே இல்ல. எந்த சீசன்லையுமே இப்படி வெறுப்பாகவில்லை. வின்னர் அறிவிப்பின் போது நான் வெளியில் வந்துவிட்டேன்.வீட்டில் இருப்பவர்கள் அர்ச்சனாவை ஏத்துக்கொள்ளவே இல்ல. எந்திரன் படத்தில் கடைசியில் எல்லா ரோபோவும் சேரும்ல. அதுபோல  அர்ச்சனா ஜெயிச்சது கமலால் ஏத்துக்கவே முடியலை. 

நைட் அங்கு பெரிய சண்டனை நடந்தது. ரொம்ப பிரச்சினை ஆனது. என்னுடைய பொண்ணு அப்படி கமலிடம் நடந்து கொண்டால் கூட நான் சப்போர்ட் செய்ய மாட்டேன்.என்னால் அதை சொல்ல முடியாது. அங்கிருந்த எல்லாரும் என்னிடம் பேசினார்கள். ஆனால் விசித்ராலாம் செம கடுப்பில் இருக்கிறார்.

 நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே கடுப்பாகி என் அம்மா சத்தியமாக கிளம்பி வந்துவிட்டேன். மணிக்கு கொடுத்து இருந்தால் கூட ஓகேவாக இருந்து இருப்பேன். விஷ்ணு, தினேஷ் எல்லாம் என்னிடம் வந்து பேசினார்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.


Advertisement

Advertisement