• Dec 27 2024

இளையராஜாவின் லைவ் கான்செட் திகதி அறிவிப்பு,இசைப்பிரியர்கள் தயாராகுங்கள் !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

அன்னக்கிளியில் ஆரம்பித்தது இன்று வரை இசையமைப்பாளராக கிட்டததட்ட 1400 திரைபடங்களை தாண்டி திரையுலகில் பயணித்துக்கொண்டிருக்கும் இளையராஜா லேயண்ட் பட்டத்திற்கு எப்போதும் பொருத்தமானவரே.திரைப்படங்களை தாண்டி இளையராஜாவின்  லைவ் கான்செட் எப்போதும் தனி இரசிகர் படையை கொண்டிருக்கும்.


எங்கும் நிறைந்த கடவுளை ஆலயங்களில் காண காத்திருக்கும் பத்தர்கள் போல இசைஞானி இளையராஜாவின் இரசிகர்களும் அவரின் லைவ் கான்செட் ஒன்றிற்காக தவமிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். மேடையில் அவரை பார்த்தபடியே இசை மழையில் நனைய ஏராளம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் இசைஞானியின் இரசிகர்களை மகிழ்வூட்டும் செய்தி வெளியாகியிருக்கிறது.இளையராஜாவின் அடுத்த  இசை நிகழ்ச்சி  ஜூலை 14 ஆம் திகதி சென்னை நந்தனத்தில் நடக்க இருக்கிறது எனும் செய்தியும்  நாளை முதல் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகிறது எனும் கூடுதல் தகவலும் வெளியாகி இருக்கிறது.

Advertisement

Advertisement