• Dec 26 2024

அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.. 12 வருசமா விவாகரத்து கேட்டேன்! சுசித்ரா பரபரப்பு பேட்டி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழக மக்கள் இடையே ரேடியோ ஜாக்கியாக பிரபலமானவர் தான் பாடகி சுசித்ரா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் அதிகளவான பாடல்களை பாடியுள்ளார். அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான தமன்னா, மாளவிகா, ஸ்ரேயா, லட்சுமி ராய் ஆகிய பல நடிகைகளுக்கு டப்பிங் பேசி உள்ளார்.

தமிழில் வெளியான லேசா லேசா என்ற பாடல் மூலம் பாடகி ஆக அறிமுகமானார் பாடகி சுசித்ரா. அதன்பின் தமிழ் சினிமாவுக்கு பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

இதையடுத்து, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் போன்ற  படங்களில் துணை நடிகராக நடித்த கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

எனினும், 2005 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் 2017 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் பிரிந்தார்கள். அதற்கு காரணம் சுச்சி லீக்ஸ் என்ற விவகாரம் தான்.


அதில், பாடகி சுசித்ராவின் ட்விட்டர் தளத்தில் தனுஷ், அனிருத், த்ரிஷா, அண்ட்ரியா என பல நடிகர்களும் தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தமிழ்த் திரை உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து சுசித்ராவின் திரையுலக கேரியர்  முடிவுக்கு வந்தது. அவரைப் பற்றி பலவிதமான தகவல்கள் காட்டுதியாய் பரவியது. ஆனாலும் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக போலீசார் புகார் அளித்தார்.  


இந்த நிலையில், தற்போது பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில், தனது கணவருக்கும் தனுஷுக்கும் இடையே நெருங்கிய உறவு காணப்படுவதாகவும், கார்த்திக் குமார் தம் அடிப்பதாகவும், அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் என்னால் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும்  தாறுமாறாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், எனக்கும் கார்த்திக்கும் பெற்றோர்கள் தான் பார்த்து திருமணம் செய்து கொண்டார்கள். இதனால் அவரிடம் எந்த காதலையும் நான் எதிர்பார்க்க இல்லை. அவரிடம் நான் தான் விவாகரத்து கேட்டேன். ஆனால் அவர் தான் முதலில் முந்திக் கொண்டு பேட்டி அளித்தார். அவர் தான் சுச்சி லீக்ஸ்க்கும் காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் தான் இப்பொது தனது சிறுவது நண்பரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவரிடம் உண்மையான அன்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement