• Dec 27 2024

’இன்று நேற்று நாளை 2’ பூஜை.. விஷ்ணு விஷால் விரட்டப்பட்டாரா? புதிய ஹீரோ யார்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’இன்று நேற்று நாளை’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று நடந்த நிலையில் இந்த பூஜையில் இயக்குநர் ரவிக்குமார், தயாரிப்பாளர் சிவி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று முதல் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இருப்பதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இன்று நேற்று நாளை’ முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மியா ஜார்ஜ் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் இவர்கள் இருவரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. விஷ்ணு விஷால் ஏற்கனவே சில படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டாலும் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு தான் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் ’இன்று நேற்று நாளை’ முதல் பாகத்தில் ஆர்யா கிளைமாக்சில் ஒரு சிறப்பு தோற்றத்தில் விஞ்ஞானியாக நடித்திருப்பார். அவர்தான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தை ரவிக்குமார் இயக்கிய நிலையில் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவில்லை என்றும் இந்த படத்தை அவரது உதவியாளர் ஒருவர் தான் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement