• Dec 25 2024

50 வயது முரட்டு சிங்கிளை ரகசிய திருமணம் செய்த திவ்யா ஸ்ரீதர்.. குவியும் விமர்சனங்கள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் கண்டெக்டர் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றின் மூலம் அறிமுகமானார். இவர் சினிமாவில் காலடி பதிக்கும் போது 18 வயதானவராக காணப்பட்டார். அதன் பிறகு நடித்து வந்த இவர் தனது முதலாவது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு ஒரு ஆண்மகனும் பெண் மகளும் உள்ளார்கள்.

2019 ம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பிறகு மீண்டும் சின்னத்திரையில் பிஸியான நடிகையாக மாறினார். அதன்படி 'பத்தரமாட்டு' சீரியலில் நடிக்கும் போது அதில் தன்னுடன் இணைந்து நடித்த கிரிஷ் வேணுகோபாலை காதலித்து உள்ளார்.

இதை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் குருவாயூர் கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே சூழல் ரகசியமாக கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. அதன் பின்பு திருமண போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் திவ்யா.


வேணுகோபால் நடிகராக மட்டும் இல்லாமல் பேச்சாளராகவும், இயக்குனராகவும், எழுத்தாளராகவும் காணப்படுகின்றார். இவருக்கு 50 வயதான போதும் திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக காணப்பட்டுள்ளார். தற்போது தன்னைவிட 10 வயது குறைவான விவாகரத்தான நடிகை திவ்யா ஸ்ரீதரரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது இவர்களுடைய திருமண புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வருவதோடு கடும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றது. ஆனாலும் இரு மனம் இணைந்தால் போதும், இரண்டு வீட்டாரும் பேசி முடிவெடுத்து தான் இந்த திருமணத்தை செய்தோம். இதனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன பிரச்சனை என்று திவ்யா ஸ்ரீதர்  அதிர்ச்சியும் கொடுத்துள்ளார்.


Advertisement

Advertisement