• Dec 25 2024

இனியாவை தூக்கிப்போட்டு வெளுக்கணும்.! அதிர்ச்சியில் மனமுடைந்த பாக்கியா!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், டான்ஸ் கம்பெட்டிஷனில் இனியா வெற்றி பெற்று இதற்கு எல்லாம் காரணம் தனது அப்பா தான் அவரை ஸ்டேஜுக்கு கூப்பிட்டு புகழ்ந்து தள்ளுகின்றார். ஆனால் அந்த இடத்தில் பாக்கியாவை சற்றும் கணக்கெடுக்கவில்லை.

அதன் பின்பு டான்ஸ் மாஸ்டரை மேடைக்கு அழைக்க, இதை பார்த்து பாக்கியாவும் எழிலும் அதிர்ச்சி அடைகின்றார்கள். மேலும் இனியா மாஸ்டரிடம் எப்போது சேர்ந்தார்? தனக்கு எதுவுமே தெரியவில்லை என்று எழிலிடம் சொல்லி புலம்புகின்றார். மேடையில் கோபி பாக்கியாவை வெறுப்பேற்றுவதற்காகவே கெத்தாக பேசுகின்றார்.

இதைத்தொடர்ந்து பாக்கியாவிடம் பேசிய கோபி கூடிய சீக்கிரமே என்னுடைய மூன்று செல்லங்களும் என்னிடம் வந்து விடும் என்று சொல்ல, அதுல நான் வரமாட்டேன் என்று எழில் சொல்லுகின்றார். இவ்வாறு கோபி பேசிக்கொண்டிருக்க, பாக்கியாவும் எழிலும்  அங்கிருந்து செல்லுகின்றார்கள்.


வீட்டுக்கு வந்த இனியா ஈஸ்வரியிடம் சொல்லி சந்தோஷப்பட, அங்கு வந்த பாக்யா ஏன் என்னிடம் சொல்லவில்லை? நான் ஸ்டேஜில் இருக்கும் போதும் உனக்கு டான்ஸ் மாஸ்டர் அரேஞ்ச் பண்ண முடியவில்லை என்றுதானே கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்ல, நீ சும்மா சொல்லாத.. உனக்கு பிசினஸ், ரெஸ்டாரண்ட் தான் முக்கியம் என்னைப் பற்றி யோசிக்க மாட்டாய் என்று சொல்லுகின்றார். இதை கேட்ட பாக்கியா ஆடிப் போகின்றார்.

செழியன் அங்கு வரவும் இனியாவுக்கு சப்போர்ட் ஆக பேசி அவரை மேலே அழைத்துச் செல்கிறார். பிறகு ஜெனி நாளைக்கு 8 மணிக்கு நான் நீங்க அமிர்தா பாட்டி ஒரு இடத்துக்கு போவோம் என்று சொல்லுகின்றார். என்ன விஷயம் என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளார் ஜெனி. அதன்படியே அடுத்த நாள் நான்கு பேரும் கிளம்பி வெளியே செல்லுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement