பாக்கியலட்சுமி இன்றைய எபிசொட்டில், இனியா ஈஸ்வரிக்கு கால் எடுத்து எங்க நிக்கிறீங்கள் என்று கேக்கிறாள். அதுக்கு ஈஸ்வரி உன்ட அம்மா கேக்கச் சொன்னாளோ என்று கேட்டதுடன் ஊர் முன்னாடி அசிங்கப்படுத்திப் போட்டு இப்ப என்ன அக்கறையில கேக்குறா என்று கோவமாக பதிலளித்தார். அதுக்கு உடனே இனியா இல்ல பாட்டி நான் தான் கேட்டேன் என்றாள். பிறகு கோபி ஈஸ்வரியிட்ட இருந்த போன வாங்கி தான் கதைத்தார்.
பின் இனியா டாடி நீங்க வீட்ட போட்டிங்களா? என்று கேட்டாள். அதற்கு கோபி ஓம் நாங்கள் வீட்ட வந்திட்டோம் நீ பார்ட்டிய என்ஜோய் பண்ணிட்டு வா என்றார். பின்னர் ஈஸ்வரி பாக்கியா முன்ன மாதிரி எல்லாம் இல்ல என்றதுடன் இந்த ரெஸ்டாரெண்ட் உருவாக்கி கையில காசு வந்த உடனே ஆளே மாறிட்டாள் என்றார். இப்புடியே எல்லாருக்கும் முன்னால மூஞ்சல அடிச்ச மாதிரி பதில் சொல்லுவாள் என்று கோவமா கதைத்தார்.
அதுக்கு கோபி அம்மா ஒருத்தருக்கு விருப்பம் இல்லை என்றால் விருப்பம் இல்லனு தான் சொல்லணும் என்றார்.மேலும் யாரையும் கட்டாயாப் படுத்தக் கூடாது என்றார். அதைத் தொடர்ந்து கோபி கிச்சுனுக்கு போய் தண்ணி குடிக்கிறார். அப்ப தான் கொடுத்த கிப்ட பாக்குறார். அப்பதான் அவருக்கு தெரியுது தான் கொடுத்த கிப்ட பாக்கியா பாக்கல என்று. பிறகு ஜோசிச்சார் அது சரி ஏன் நான் கொடுத்த கிப்ட பாக்கனும் என்று தனக்கு தானே சொல்லுறார்.
அதைத்தொடர்ந்து தான் எழுதிய லெட்டரை வாசிச்சுப் பாத்து பீல் பண்ணிட்டு அந்தக் கிப்ட தன்ர ரூம்முக்க எடுத்துக் கொண்டு போறார். பின்னர் ரேஷ்மா பாக்கியாவிடம் நியமாவே உங்களுக்கு கோபியுடன் சேரனும் என்ற எண்ணம் இல்லையோ எனக் கேக்கிறார். அதுக்கு பாக்கியா இதே கேள்வியை நான் உங்களைக் கேட்டா நீங்க என்ன பதில் சொல்லுவீங்கள் என்றார். பின்னர் இனியா செல்வின்ர மகன் ஆகாசோட ரகசியமாக கதைத்துக் கொண்டிருக்கிறார். அப்ப திடீர் என்று செல்வி வந்து நிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!