• May 23 2026

விஜயசாந்திக்கு அடுத்த அதிரடி ஹீரோயின் நடிகை துஷாராவா? லீக்கான சுவாரஸ்யமான தகவல்கள்..

shali / 1 week ago

Advertisement

Listen News!

தேசிய விருது பெற்ற இயக்குநர் ஏ. சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய வெப் தொடரான EXAM தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகை துஷாரா விஜயன், “இந்த தொடரின் கதையை கேட்ட உடனே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, பல ஆண்டுகளாக ரசிகர்கள் கொண்டாடி வரும் விஜயசாந்தி மாதிரியான வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். அதற்காக முழு அர்ப்பணிப்புடனும், அதிக ஈடுபாட்டுடனும் நான் நடித்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

துஷாராவின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கதைக்களம், கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ‘EXAM’ வெப் தொடர் வரும் மே 15ம் தேதி Prime Video தளத்தில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement