• Apr 23 2026

ஜிவி பிரகாஷ் இசையில் அஜித் கூட்டணியா.? வெளியான தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் குமார். இவர் கடந்த ஆண்டு 'அஜித் குமார் ரேஸிங்' என்ற நிறுவனத்தை தொடங்கி கார் ரேஸ்களில் ஈடுபட்டு வருகின்றார். அதற்காக ஆறு மாதங்கள் சினிமா, அடுத்த ஆறு மாதங்கள் கார் ரேஸ் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இறுதியாக அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, ‘குட் பேட் அக்லி’ படத்தின் இயக்குநருடன் மீண்டும் இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அஜித் நடிக்கும் ரேஸிங் என்ற படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.எனினும் இது தொடர்பிலான அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும்  வெளியாகவில்லை.


ஏற்கனவே, அஜித்தின் கார் ரேஸ் பயணம் குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் ஆவணப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். அஜித்தை வைத்து 2007ஆம் ஆண்டு ‘கிரீடம்’ திரைப்படத்தை இயக்கியவர் ஏ.எல். விஜய். 

அந்த படம் 2007ல் வெளியாகியது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து, இந்த ஆவணப்படத்திற்காக அஜித்துடன் மீண்டும் ஏ.எல். விஜய் இணைந்துள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆவணப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement