• Dec 26 2024

பிக் பாஸ் வீட்டுல அக்‌ஷயாவுக்கு இப்படியெல்லாம் கொடுமை நடக்குதா? கானா பாலா சொன்ன ஷாக்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில் அவர்கள் தோற்றால் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதை நினைவில் வைத்தே, தற்போது உள்ள போட்டியாளர்கள் தீயாய் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 இல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்து எலிமினேட் ஆன கானா பாலா ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் இன்னும் கொஞ்சம் பொறுமையா கற்றுக் கொண்டு உள்ள போய் இருக்கனும். அதாலதான் உஷாராக இல்லாமல் போயிட்டன். 2ம்  வாரம் விவாதம், 3வது வாரம் சண்டை, 4வது வாரம் இருந்து இருந்தா நிச்சயம் நான் விளையாடியிருப்பேன். ஆனால், அதற்கு முதல் நான் எவிக்ட் ஆகிட்டன். 


பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை நான் பிரச்சனையாகவோ, சண்டையாகவோ பார்க்கல. அங்கு எல்லாமே விளையாட்டா தான் நடப்பவை. ஒரு நாள் சண்ட போட்டா மறுநாள் எல்லாரும் ஒன்றா இருந்து தான் விளையாடுவாங்க. அப்புறம் எப்படி அதில் உண்மையான கோபம் இருக்கும்? இது தான் என்னால இந்த விளையாட்ட உணர முடியாம போக காரணம் விசித்ராவும்-அர்ச்சனாவும் ஒரு ஆள் கூட தான் சண்டை போடுகிறார்கள். 'நீ ஏன் மாயா கூட இருக்க?' என்று என்னுடம் அவர்கள் சண்டை போடவில்லை.

அத்தோட,  தினேஷ் கண்டிப்பா இந்த பிக் பாஸ் வீட்டுல ஜெயிச்சே ஆகணும் என்கிற கட்டாயத்தில் வந்திருக்கிறார். ஆனா அவர் கொஞ்சம் அசால்ட்டா இருந்தா கூட அவருக்கு குழிய தோண்டி பறிச்சிடுவாங்க. 

தினேஷ், மாயா, விஷ்ணு ஆகியோர் போட்டியில் கடுமையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பூர்ணிமா நன்றாக தான் விளையாடுகிறார், ஆனால், தான் நல்ல பொண்ணு என நிரூபிக்க தான் லட்டு கொடுத்து நடித்தார். 


மேலும், மாயா என்னை 'எங்க அண்ணன்' என்று தான் சொல்லுவா, எனக்கு அது பாசமா இருந்துச்சு. அதால தான் நான் சண்ட போடல.. அர்ச்சனா முதல்ல அழுதாலும் இப்ப நல்லா விளையாடுறா. அத்தனை டேலண்ட் இருக்கு அந்த பொண்ணுட்ட, ஆனால் கேம் விளையாடல. அவருக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவு, கண்டிப்பா ஒரு நாள் மாறும். 

அதுமட்டுமின்றி, பிக் பாஸ் போட்டியாளர்களுள் அக்‌ஷயா பாவம். 6 பேரை நம்பி தான் இந்த வாழ்க்கை போகுது என்று அவ இருக்கா. எதுக்கு இந்த நரக வேதனை? அவங்க ஒரு நோயாளியா தான் இருக்காங்க, தினமும் ரத்தம்  எடுத்து, டயாலிசிஸ் பண்ணிட்டு, பாவம் உயிரே போகும். கருணை கொலை பண்ணிடுங்கிற நிலைமை. அப்படியொரு நிலைமையில எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடனும்? பாவம் அவங்க போகட்டும். 


மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் மூன்று வைல்ட் கார்ட் என்ட்ரி போக உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு போவதாக இருந்தால் பிரதீப், விஜய், யுகேந்திரன் ஆகிய மூன்று பேர் போகலாம். ஆண்கள் போனால் தான் பிக் பாஸ் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். பெண்கள் திரும்ப உள்ள போனா, அவங்கள அழ வச்சு உட்கார வச்சுடுவாங்க. போட்டி சுவாரஸ்யமாக இருக்காது' என உள்ள நடந்த விடயங்கள பகிர்ந்து உள்ளார் கானா பாலா..

Advertisement

Advertisement