இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தீபிகா படுகோன். தமிழில் ரஜினிகாந்தின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்து இருந்தார்.
இவர் இந்தி நடிகரான ரன்வீன் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் தங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ரன்வின் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது திருமண புகைப்படங்கள் அத்தனையும் நீக்கி உள்ளார். இதன் காரணமாக அவர்கள் பிரியப் போகின்றார்களா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
எனினும் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி தீபிகா படுகோனின் கையை பிடித்தபடி, ரன்வீர் சிங் வெளியிட்ட புதிய புகைப்படம் அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
Listen News!