• Dec 26 2024

'தளபதி 69' படத்தின் இயக்குநர் இவர் தானா? சற்றுமுன் வெளியான அப்டேட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி 69 படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்பது உறுதியான நிலையில், இந்தப் படத்திற்கான இயக்குநர் மட்டும் இழுபறியாகவே காணப்பட்டது. தற்போது அதற்கும் தீர்வு கிடைத்துள்ளது.

தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதை அடுத்து நடிகர் விஜய்யின் 69 ஆவது படத்திற்கு இயக்குனர் யார் என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று கூறப்பட்டது.


அதாவது விஜய்யின் கடைசி படத்தை இயக்குவதற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் போட்டி போட்டு வந்தார்கள்.


இந்த நிலையில், தளபதியின் 69 ஆவது படத்திற்கு இயக்குநர் யார் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத் தான் தளபதியின் 69 ஆவது படத்தை இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாம் 

இதற்கான அறிவிப்பு, அடுத்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அதிகாரபூர்வமாக  வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement