• Dec 25 2024

மீனாவிடம் பெல்ட் அடி வாங்கப்போவது மனோஜா? விஜயாவா? பரபரப்பான திருப்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் ஸ்ருதி வீட்டை விட்டு செல்கிறார். விஜயா இதுதான் சான்ஸ் என அவளா வந்தா வரட்டும் நீ கூப்பிட வேண்டாம் என்று ரவிக்கு சொல்லுகின்றார். ரவியும் கிளம்பி  ரெஸ்டாரண்டுக்கு சென்று விடுகின்றார்.

இதை தொடர்ந்து மீனா ரவிக்கு போன் பண்ணி ஸ்ருதியை கூட்டிவருமாறும் புருஷன் பொண்டாட்டிய என்றால் இப்படியா இருக்கின்றது. உங்க அண்ணன் எனக்கு எதுவும் என்றால் லீவு போட்டு நிற்பார் என்று எடுத்துச் சொல்லுகின்றார். ரவியும் தான் ஸ்ருதியை கூட்டி வருவதாக எடுத்துச் சொல்லுகின்றார்.

அதன் பின்பு மீனா வீட்டிற்கு அவர்களுடைய சித்தி குடும்பத்தார் வருகின்றார்கள். தனது மகளுக்கு கல்யாணம் என்று கல்யாண பத்திரிக்கை வைக்க, மீனா அவர்களை இருந்து சாப்பிட்டு போகுமாறு சொல்லுகின்றார். முத்துவிடம் இந்த விஷயத்தை சொல்ல, அவரும் அவர்களை சாப்பிட வைத்து அனுப்புமாறு சொல்லுகின்றார்.


மீனா அவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்கும்போது விஜயா அங்கு வந்து விடுகின்றார். மீனா நடந்தவற்றை சொல்லவும் அவர் பேசுகின்றார். ஆனாலும் மீனா அவர்கள் போன பிறகு என்னவென்றாலும் பேசுங்கள், எனக்கு அடித்தாலும் பரவாயில்லை என்று கெஞ்ச, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வெளியே வந்து அவர்களை அசிங்கப்படுத்தி அனுப்புகின்றார்.

இறுதியாக மனோஜ் ஜலதோஷம் பிடித்திருக்க மீனாவை மார்க்கெட் போய் நண்டு வாங்கி வருமாறு விஜயா  சொல்லுகின்றார். ஆனால் மனோஜ்க்கு நான் தனியாக எதுவும் செய்ய மாட்டேன் என்று மீனா சொல்லுகின்றார். இதனால் மனோஜ்  அம்மாவை எதிர்த்து பேசுறியா என்று சொல்லி திட்ட, உங்களுடைய பொண்டாடியிடம் சொல்லி செய்யுங்கள் என்று மீனா சொல்லுகின்றார். ஆனாலும் மனோஜ், விஜயா விடாமல் மீனாவை திட்டிக் கொண்டிருக்க, பொறுமை இழந்த மீனா  ரூமுக்கு சென்று பெல்ட் எடுக்கிறார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement