• Dec 26 2024

நாளாந்தம் எகிறும் ப்ளாக் படத்தின் வசூல் வேட்டை.. மூன்று நாட்களில் இத்தனை கோடியா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் மற்றும் ஜீவா,  பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான பிளாக் திரைப்படம் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சிவா மனசுல சக்தி, ராம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் ஜீவா. இவர் நடிகராக மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தயாரித்த குட் பிலிம்ஸ் இன் உரிமையாளரான ஆர்பி சவுத்ரியின் மகனும் ஆவார்.

கற்றது தமிழ், ஈ போன்ற மிகவும் ராவான சப்ஜெக்ட் படங்களையும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார். அத்துடன் டிஸ்யூம், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி போன்ற கமர்சியல் படங்களிலும் நடித்து மார்க்கெட் உள்ள நடிகராக தன்னை மாற்றிக் கொண்டார். இவர் நடித்த படங்களில் என்றென்றும் புன்னகை, கோ உள்ளிட்ட படங்கள் என்றைக்கும் எவர்கிரீன் படங்கள் ஆகவே காணப்படுகின்றன.


இந்த நிலையில், ஜீவா நடிப்பில் ஆயுத பூஜை தினமன்று வெளியான திரைப்படம் தான் பிளாக். இதனை கே ஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ப்ரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல இவர்களுடன் ஜோகி, பிரசன்னா, சாரா ஷியாம் என பலர் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், ப்ளாக் படத்தின் மூன்று நாட்களுக்கான வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் முதல் நாளில் 65 லட்சம் ரூபாய் வரை வசூலித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இரண்டாம் நாளில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. தற்போது மூன்று நாட்களின் இறுதியில் 3. 25 கோடிகளை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement