• Dec 26 2024

மனோஜின் புதிய கடை தீயில் கருகி நாசமா? பழைய லேபர்களின் சாபம் பலித்தது?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ் பிச்சை எடுத்ததற்கு பலன் கிடைத்தது போல பிரபல கடை ஒன்றுக்கு ஓனராக கடையை வாங்கி உள்ளார்.

இன்றைய எபிசோடில் விஜயா கடையை திறந்து வைத்ததோடு அவரின் கைகளாலேயே கடையின் திறப்பையும் கடை  சம்பந்தப்பட்ட டாகுமெண்ட்ஸையும் வாங்கிக் கொள்கிறார். அதன் பிறகு இதுவரை அந்த கடையில் வேலை செய்த பழைய ஆட்களை எல்லாம் துரத்தி விட்டு புதிய ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறார் மனோஜ். அதனைப் பார்த்து ரோகினையும் பாராட்டுகிறார்.


இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோ ஒன்றில், கடைக்கு புதிய முதலாளியாக சென்ற மனோஜ்க்கு ஆப்பு வைக்கும் வகையில், அந்த கடையில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட வேலையாட்களில் ஒருவர் அந்த கடைக்கு தீ வைப்பது போன்று காட்டப்படுகிறது. இதன் காரணமாக கடை சேதம் அடைவது போன்றும்,  மனோஜ்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


எனினும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. தற்போது தான் மனோஜ் கடைக்கு முதலாளியாக பணிக்கு அமர்ந்துள்ளார். நாளைய தினம் இடம்பெறவுள்ள எபிசோட்டில் அவர் கடைக்கு போக மறுத்து தூங்குகின்றார். இதன் போது இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றிருக்குமா? அல்லது முத்துவுக்கு ஜீவா பற்றிய விஷயமும், . மனோஜ் 30 லட்சங்களை வாங்கிய விஷயமும் தெரிய வருமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement