• Dec 27 2024

அனிமல் படத்தின் சாதனையை தூக்கிவீசிய 'லாபடா லேடீஸ்' திரைப்படம்! கொளுத்துடா வெடிய...

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

2000 ஆண்டுகளில் திருமணங்களில் கொடுக்கப்பட்ட மதிப்பும் சகிப்புத்தன்மையும் இன்றைய காலகட்டத்தில் முற்றிலுமாக இல்லை என்ற நிலையில் காணப்படுகின்றது. அவ்வாறு திருமணங்களால் ஏற்படும் குழப்பங்களையும், பெண்கள் சந்திக்கும் சிக்கல்களையும் பற்றி பேசிய படம் தான் லாபடா லேடீஸ்.

குறித்த படத்தில் திருமணம் முடிந்ததும் மனைவியை தன்னுடன் சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார் நாயகன். திருமணம் ஆன பெண்கள் கணவனைத் தவிர வேறு யாரையும் முகம் பார்க்கக் கூடாது என்பதால் தன் முகத்தை மறைத்த படியே இருக்கிறார் நாயகி.

அதன் பிறகு இருவரும் ரயிலில் பயணிக்க அவர்களுக்கு எதிராகவே இன்னும் இரு ஜோடிகள் ரயிலில் பயணிக்கின்றார்கள். அவர் கட்டத்தில் தனது மனைவியை அவசர அவசரமாக கூட்டிக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி தனது வீட்டுக்கு சென்று  வீட்டாருக்கு காட்டும்போது மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றது. காரணம் அது தனது மனைவி இல்லை. வேறு ஒருவரின் மனைவி என்று.


இதைத்தொடர்ந்து இரண்டு கணவர்களும் தமது மனைவியை தொலைத்த பரபரப்பில் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க, காணாமல் போன மனைவியை எப்படி கண்டுபிடித்தார் என்பதே இதன் மீதி கதையாக காணப்பட்டது. 


இந்த படம் பெண் சுதந்திரம், கல்வியின் அவசியத்தை மையமாகக் கொண்டு ஆழமான கருத்தை கூறியுள்ளதோடு திருமண சடங்குகள் என்ற பெயரில் இந்த சமூகத்தில் ஒரு பெண் எதையெல்லாம் எதிர்கொள்கிறாள் என்பதையும் அழகாக சுட்டிக் காட்டி உள்ளது.. மேலும் இந்த படத்தை நடிகர் அமீர்கான் தயாரிக்க, அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ்தான் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒரே மாதத்தில் 13.8 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று அதிக பார்வையாளர்களை பெற்றிருந்த அனிமல் படத்தை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளது லாபடா லேடீஸ் திரைப்படம். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement