• Apr 20 2026

கமல்ஹாசனுக்கு மாயா நெருங்கிய உறவினரா? உண்மையை உடைத்த பிரபல பத்திரிகையாளர்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மக்களின் எதிர்பார்ப்போடு தொடங்கி தற்போது 70 நாட்களைக்  கடந்துள்ளது பிக்பாஸ் சீசன் 7. 

இதன் ஆரம்பத்தில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 

மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான்.


குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா. மேலும், லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள மாயா அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அவரைக் கண்டிப்பதில்லை என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், கமல்ஹாசனும் மாயாவுக்கு உறவினர் என்பதால் தான் கமல் அவரை ஒழுங்காகக் கண்டிப்பதில்லை என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 


இவ்வாறான நிலையில், இந்த குற்றச்சாட்டை சினிமா மூத்த பத்திரிக்கையாளர் சித்ரா லட்சுமணன் மறுத்துள்ளார்.

மேலும், அவர் 'கமலும் மாயாவும் உறவினர்கள் இல்லை. அப்படியே உறவினர்களாக இருந்தாலும் கமல் அப்படி பாரபட்சம் பார்க்கக் கூடிய ஆள் இல்லை. கமல்ஹாசனின் குணம் பற்றி எனக்கு தெரியும்' எனக் கூறியிள்ளார்.

Advertisement

Advertisement