• Jan 04 2025

முத்துகுமரனுக்கு இவ்வளவு மட்டமான புத்தியா? கேர்ள்ஸை இப்படியா இன்சல்ட் பண்றது?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றையோடு 87 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசன் இன்னும் ஒரு சில வாரங்களிலேயே முடிவுக்கு வரவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால்  பிக்பாஸ் வீட்டில் எஞ்சியுள்ள 10 போட்டியாளர்கள் மத்தியிலும் கடும் போட்டி நிலவி வருகின்றது. 

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ  வெளியாகி உள்ளது. அதில் முத்துவுக்கும் மஞ்சரிக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நீளுகின்றது.

குறித்த ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் பேசிக் கொண்டு இருக்க, முத்துவுக்கும் மஞ்சரிக்கும் இடையே வாக்குவாதம் தொடர்கின்றது. 


இதன்போது தனியா விளையாடுவதற்கும் தைரியம் வேண்டும், சகுனி வேலையை பார்த்துவிட்டு போய்விட்டா மஞ்சரி என முத்து சத்தம் போடுகின்றார்.

மேலும் ஏன் முடிஞ்ச பிரச்சனையை மீண்டும் கிளப்பி விடுகின்றா? என்று மஞ்சரியிடம் கேள்வி எழுப்புகின்றார் முத்து. இதன்போது இடையில் குறுக்கிட்ட ஜாக்குலின் நீயும் மத்தவங்களை புரிந்து கொள்ளு என்று முத்துவுக்கு சொல்லுகின்றார்.

அத்துடன் ரொம்ப இன்சல்ட்டா பேசுறீங்க முத்து என ஜாக்குலின் சொல்ல, நீங்களும் அதைத்தான் பண்ணுறீங்க என்று முத்து சொல்லி செல்கின்றார்.

Advertisement

Advertisement