விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது யாரும் எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் இடம்பெறுள்ளது.
ஏற்கனவே ராதிகா கோபியை விட்டு விலகும் முடிவில், தான் இருந்த வீட்டை காலி பண்ணி விட்டு செல்கின்றார். இதனை ஈஸ்வரியும் இனியாவும் மறைக்கின்றார்கள். எனினும் அதற்குப் பிறகு இந்த விஷயத்தை பாக்கியா கோபியிடம் சொல்கின்றார்.
இதை தொடர்ந்து ராதிகா வீட்டுக்குச் சென்ற கோபி ராதிகாவை மீண்டும் பாக்கியா வீட்டிற்கு வருமாறு சொல்லுகின்றார். ஆனாலும் அங்கு தான் அசிங்கப்பட்டது போதாதா? நான் வரமாட்டேன் என்று ராதிகா உறுதியாக இருக்கின்றார். எனினும் அவருடைய கைகளை பிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்கிறார் கோபி.
எனவே இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஒரே வீட்டில் கோபியின் பொண்டாட்டிகள் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள். இதை பார்த்து கோபி சந்தோஷப்பட்டாலும் ஈஸ்வரி கடுப்பில் காணப்படுகின்றார்.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கோபியும் பாக்கியாவும் ஒன்றாக நின்று வழிபடுகின்றார்கள். இதை பார்த்த ரசிகர்கள் கோபிக்கு வாழ்க்கை தான் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!