• Dec 26 2024

பிரதீப் ஆண்டனி ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவரா?- சபரி மலைக்கு போக ரெடி ஆகிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ந்து வந்தது. இதையடுத்து 7வது சீசன் ஆரம்பமாகியுள்ளது. 

இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்‌ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.


இதில் பல போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறினார்கள். பாவா செல்லத்துரை உடல் உபாதை காரணமாக வெளியேறினார். ஆனால் பிரதீப் ஆண்டனி மட்டும் ரெட்காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பிரபலங்கள் முதல், ரசிகர்கள் வரை பிரதீப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.மேலும் பிரதீப் வைல்ட்காட் என்ட்ரியாக வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் பிரதீப் ஆளை விடுங்க இனிமேல் பிக்பாஸ் பக்கம் வரவே மாட்டேன். என்னுடைய அடுத்த வேலையைப் பார்க்கப்போகின்றேன் எனத் தெரிவித்திருந்தார்.


அதன்படி தற்பொழுது ஐயப்பன் மாலை போட்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பிரதீப் ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவர் எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement