பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் விசிட் பண்ணி வரும் நிலையில், இன்றைய தினம் முதலாவதாக ஜெஃப்ரியின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஜெஃப்ரியின் அம்மா போட்டியாளர்கள் பற்றி என்ன என்ன கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்று விரிவாக பார்ப்போம்.
அதன்படி முதலாவதாக பவித்ராவை பற்றி பேசிய ஜெஃப்ரியின் அம்மா, நீங்க இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து கொஞ்சம் கூட டைவர்ட் ஆகாத ஒரு பர்சனாக காணப்படுகின்றீர்கள்..
d_i_a
நீங்க வந்தபோது எப்படி இருந்தீர்களோ, உங்களுடைய வீட்டிற்கு என்ன சொல்லிவிட்டு வந்தீர்களோ அதை நீங்க கரெக்டா பண்ணுறீங்க என்று பவித்ராவுக்கு சொல்லி உள்ளார். இதன் போது பவித்ராவும் உங்க பையன ரொம்ப அழகா வளர்த்து இருக்கீங்க.. இந்த வீட்டிலேயே ஒருத்தரை எல்லாருக்கும் பிடிக்கும் என்றால் அது ஜெஃப்ரி மட்டும்தான் என்று பவித்ராவும் கூறியுள்ளார்.
அதன்பின், சௌந்தர்யா ஒரு ட்ரு ஏஞ்சல் என்று தெரிவித்துள்ளார். அவங்க பின்னாடி போய் பேச மாட்டாங்க.. ரொம்ப ஸ்ட்ரைட் பர்சன்ட் என்று சொல்லி உள்ளார். ராயனும் செங்கல் டாஸ்க்ல நல்லா பண்ணீங்க என்று சொல்லுகிறார்.
மேலும் முத்து பயங்கர காமெடி. டெவில்ஸ் டாஸ்க்ல முத்துவை பார்த்து பார்த்து பயங்கரமான சிரிச்சேன் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அருணை ரொம்ப பிடிக்கும். பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்தே ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு ஆண் தேவதை என தெரிவித்தார்.
இதே வேளை, தர்ஷிகாவை ரொம்ப மிஸ் பண்ணுவதாகவும், அன்ஷிகா என் பொண்ணு போல என அவருக்கு வளையலும் போட்டு விட்டுள்ளார்.
Listen News!