விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் தர்ஷிகா சமீபத்திய பேட்டியில் " விஷால் என்னிடம் பொய்யாக நடித்தார், அங்க நான் அம்மா பற்றி யோசிச்சி இருக்கணும் என்று உருக்கமாக பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை தர்ஷிகா கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆகி வெளியே வந்தார். இந்நிலையில் சில பேட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விஷால் குறித்தும் பிக்பாஸ் காதல் குறித்தும் வெளிப்படையாக பேசிவருகிறார். சமீபத்திய பேட்டியில் தொகுப்பாளர், "நீங்க ஒரு நடிகராக பிக் பாஸ் வீட்டுக்கு போனீங்க அங்க உங்க கிட்ட நடித்த நடிகர் யாரு?" என்று கேட்க அதற்கு தர்ஷிகா இவ்வாறு பதிலளித்தார்.
அவர் கூறியதாவது " பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தது ரொம்ப கஷ்ட்டமா இருக்கு. பவித்ரா என்னோட பிரண்ட் அங்க நிறைய விஷயம் சொன்னால் நான் அத பெருசா எடுக்கலையோன்னு தோணுது. விஷால் நான் மொக்க மூஞ்சி என்று சொல்லி இருக்காரு ஆனா எத்தனையோ இடத்துல நான் அழகா இருக்கேனு சொன்னாரு, முன்னாடி பேசிட்டு பின்னாடி போய் பேசினதுனால கண் முன்னாடி நடந்ததை நம்புறதா இல்லையானு தெரியவில்லை. எனக்கு அங்க காதல் ஆசை இருந்தது அதனை நான் ஒத்துகிறேன்" என்று கூறினார்.
d_i_a"
மேலும் கூறிய இவர் "நான் வெளிய வரும் போது உங்க பாசத்தை நான் ரெஸ்பெக்ட் பண்ணுறேன்னு சொன்னாரு அதுக்கு எனக்கு அருத்தம் புரியல. அங்க என்கிட்ட நடிச்சதுல பெஸ்ட் நடிகர் விஷால் தான். நான் அம்மா பற்றி யோசிச்சி இருக்கணும் அங்க நான் யோசிக்கவில்லை என்னோட தப்பு தான் இது. வெளிய வந்தும் கூட மக்கள் விஷாலை லவ் பண்ணது நால உங்களை பிடிக்காம போகல கொஞ்சம் கவலையா இருக்கு நீங்க வெளிய வந்தது என்று தான் சொல்லுறாங்க. நான் இன்னும் நல்ல கேம் விளையாடி இருக்கலாம். வந்த ரூட் விட்டு மாறியதுதான் தப்பு" என்று உருக்கமாக கூறியுள்ளார் தர்ஷிகா.
Listen News!