நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் நடிகை சங்கீதா இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றநிலையில் தற்போது "லிட்டில் ஒன் கம்மிங் சூன்" என்று குறிப்பிட்டு அழகிய வீடீயோ மூலம் குட் நியூஸ் கூறியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சங்கீதா. இவர் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி கர்ப்பமாக இருப்பதாக வீடியோ மூலம் ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறியுள்ளார்கள்.
அந்த வீடியோவில் கடற்கரையில் அழகிய வெள்ளை நிற உடையில் சங்கீதா இருக்க, கிங்ஸ்லி கருப்பு நிற உடையில் பிளாக் அண்ட் வைட் காமினேஷனாக அழகிய ரொமெண்டிக் வீடீயோவை ஷேர் செய்துள்ளனர். அதில் "லிட்டில் ஒன் கம்மிங் சூன்" என்று பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!