• Dec 26 2024

சிறகடிக்க ஆசை சுருதிக்கு இவளவு காஸ்ட்லியான நகையா? ஏதுமா அவளோ பணம் ?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சினிமா பிரபலங்களும் சரி , சின்னத்திரை பிரபலமங்களும் சரி பெரிய அளவில் ரசிகர்களை சம்பாதித்து நல்ல வரவேற்பை பெற்ற பின்னர் விளம்பரங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறே சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்களும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி நாடக தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக பல எபிசோட்களை கடந்துள்ளது. இந்த சீரியல் பிரபலமானதை தொடர்ந்தே இதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் பிரபலமாகி உள்ளது.


அவ்வாறு இதில் சுருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரீத்தா ரெட்டி மற்றும் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரணவ் மோகண் இருவரும் இணைந்து சரவணா ஸ்டோர்ஸ் சூப்பர் ஜுவல்லரீஸ் என்ற கடைக்கு ப்ரோமோஷன் செய்துள்ளனர். இருவரும் ஜோடியாக பாரம்பரிய உடையில் சென்று மினுமினுக்கும் நகைகளை போட்டு அழகு பார்த்து பின்பு அதனை வாங்கி செல்வது போன்ற குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.   


Advertisement

Advertisement