• Dec 26 2024

'GOAT' ரிலீஸுக்கு முன்பே படத்தின் OTT உரிமம் விலை போனதா? கைப்பற்றியது யார் தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகராக காணப்படுபவர் தான்  விஜய். இவருக்கு உலகளவில் அமோக வரவேற்ப்பு உண்டு.

இவர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பித்தார். நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் வட்டாரம் இருப்பது யாவரும் அறிந்த ஒன்று. 

அதன்படி அவர் கட்சி ஆரம்பித்த உடனேயே அவருக்கான வாக்கு விதம் கிடுகிடுவென உயர்ந்தது. கோடிக்கணக்கானோர் கட்சியில் இணைந்தனர்.


மறுபக்கம் கோட் படத்திற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதன் கடைசி படப்பிடிப்பு இலங்கையில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு படப்பிடிப்பை படக்குழு மாற்றியுள்ளனர். 

இந்த விஷயத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்ஸ்டாவில் வைத்த ஸ்டோரி மூலம் உறுதியாகியுள்ளது. 


இந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்யின் கோட் படத்தின் OTT ரைட்ஸ் வியாபாரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து விஜய்யின் கோட் படத்தை வாங்கியுள்ளதாம் என தகவல் கசிந்துள்ளது.


Advertisement

Advertisement