சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ். ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேம் சேஞ்சர் படத்தின் வெளியீட்டால் இந்த படம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான முதலாவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
d_i_a
விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான தங்கலான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. அதில் மலையாள நடிகை பார்வதி விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனாலும் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. அதில் விக்ரமின் கடின உழைப்பு மட்டும் பலராலும் பாராட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். இதனால் சித்தா படத்திற்கு கிடைத்த வெற்றி இந்த படத்திற்கும் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. மேலும் இந்த படத்தில் காளி என்ற கேரக்டரில் விக்ரம் நடித்துள்ளதோடு இந்த படம் கிராமத்து கதை களத்தில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், வீர தீர சூரன் திரைப்படம் எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!