சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை தான் கோமதி பிரியா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் என்ற சீரியலில் அறிமுகமான போதும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல்.
சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக காணப்படும் மீனா சாதாரணமாக பூ கட்டும் வியாபாரம் செய்கின்றார். இந்த சீரியலில் இவருடைய கேரக்டர் ரசிகர்களை கவர்ந்த போதும் சில சமயங்களில் சலிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
d_i_a
சினிமா வாய்ப்புக்காக ஆரம்பத்தில் பல ஓடிசங்களில் பங்கேற்ற கோமதி பிரியாவுக்கு தோல்விதான் மிஞ்சியது. ஆனாலும் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தினார் கோமதி பிரியா.
தற்போது இவருடைய காத்திருப்புக்கு கிடைத்த வெற்றியாக தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக நடித்து வருகின்றார்.
இவர் ஷூட்டிங் டைமில் இருக்கும்போது சின்ன சின்ன ரீல்ஸ் வெளியிடுவதையும் போட்டோ ஷூட் பண்ணுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். மேலும் இவர் வெளியிடும் போட்டோஸ், வீடியோக்களை பார்ப்பதற்காகவே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்த நிலையில், சீரியல் நடிகை கோமதி பிரியா கோவில் ஒன்றில் கழுத்தில் எலுமிச்சை மாலையுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் சாதாரணமாக சாரி கட்டி குடும்ப குத்து விளக்காக இருக்கும் கோமதி பிரியாவின் அழகை ரசிகர்கள் பலரும் வியந்து பார்த்து வருகின்றார்கள். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்..,
Listen News!