• Jun 14 2026

டைட்டானிக் ரேஞ்சுக்கு இருக்கும் ஸ்டார் படம் ... இணைய கூலிப்படைகள் வேறு! கவினின் மானத்தை வாங்கிய பிரபலம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக காணப்படும் நடிகர் கவின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

சின்னத்திரையில் நடித்து வந்த கவின், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளித்திரையிலும் கால்பதித்தார். இவர் நடித்த டாடா படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக காணப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்து இருந்தார். இதனை தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் எமோஷனல் ஆகி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் இன்றும் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அடுத்த சிவகார்த்திகேயன் கவின் தான் என்று செய்தி பரவி வருவது தொடர்பில் பிஸ்மி பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


கவினின் வளர்ச்சி இயல்பானது இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் வளர்ந்து வரும் இந்த கட்டத்திலேயே இணைய கூலிப் படைகளை வைத்துள்ளார். இதன் காரணமாக இணையத்தில் அவரை பில்டப் செய்கின்றார்கள். கவின் பிக் பாஸ்க்கு போன போது, கவின் ஆர்மி எல்லாம் வந்தது. முன்பு ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின் தான் ஓவியா ஆர்மி உருவானது. ஆனால் பிக் பாஸ்க்கு செல்வதற்கு முன்பே கவினுக்கு  ஆர்மி உருவாகியுள்ளது.


அதற்கு பிறகு சினிமாவுக்கு வந்த கவின் அந்த ஆர்மியை தற்போதும் செயல் படுத்தி வருகிறார். ஸ்டார் படம் வெளியான பிறகு கவினை சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றார்கள். உண்மையில் ஸ்டார் படத்தின் வசூல் ஓரளவிற்கு உள்ளது படமும் சுமாராகத்தான் உள்ளது. ஆனால் சோசியல் மீடியாவில் ஸ்டார் படத்தை டைட்டானிக் ரேஞ்சுக்கு கொண்டாடி வருகின்றார்கள் என்றார்.

Advertisement

Advertisement