• Apr 24 2026

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா... விஜய் டிவியின் அடுத்த சர்ப்ரைஸ்..??

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் மக்களின் வரவேற்பை பெறுவதற்காக போட்டி போட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவை மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றன.

இந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் சீரியல்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இல்லத்தரசிகள் முதல் தற்காலத்தில் உள்ள இளைஞர்கள் வரை இதற்கு அடிமைகளாக காணப்படுகின்றார்கள்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக தற்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற ரியாலிட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை காலம் விஜய் டிவியில் பணியாற்றிய வெங்கடேஷ் பட் அதற்கு தலைமை தாங்கியுள்ளார்.

இந்த நிலையில், விஜய் டிவியில் புதிய ரியாலிட்டி ஷோ ஒன்று ஆரம்பமாக உள்ளது. அதற்கு டிக் டிக் டிக் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நிகழ்ச்சியை KPY பாலா மற்றும் நடிகர் சாந்தனுவின் மனைவி கீர்த்தி தொகுத்த வழங்க உள்ளார்களாம்.


Advertisement

Advertisement