• Dec 25 2024

விஜய் டிவி சீரியல்களில் இப்படியொரு மாற்றமா? வெற்றிநடை போடும் பாக்கியா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. இதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மட்டுமில்லாமல் சமையல் நிகழ்ச்சி, பாடல், ஆடல், பிக் பாஸ் என அனைத்திற்குமே சிறியோர் முதல் பெரியோர் வரை ரசிகர்களாக உள்ளனர்.

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தில் கொண்டு வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த ஏழு வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகின்றது. தற்போது இதன் எட்டாவது சீசன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் சமீப காலமாகவே டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்தித்த நிலையில், தற்போது கோஸ்ட் ஸ்டாரின் முதல் மூன்று இடத்திற்கு முன்னேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

d_i_a

தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பதற்காக சன் டிவி, விஜய் டிவி சேனல்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ச்சியாக முதல் ஐந்து இடங்களை பெற்று வருகின்றன. 


கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் முதலாவது இடத்தை தக்க வைத்தது. ஆனால் அந்த சீரியலை இப்போதும் சரிவை  சந்தித்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது பாக்கியலட்சுமி சீரியல் முதல் 3 இடத்திற்கு முன்னேறி உள்ளது. மேலும் சிறகடிக்க ஆசை விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுவதோடு அதன் பின்பு பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலும்,  அடுத்த இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும் காணப்படுகிறது.

Advertisement

Advertisement