• Dec 26 2024

இது வீடா இல்லை 5 ஸ்டார் ஹோட்டலா? ‘குக் வித் கோமாளி’ பிரபலத்தின் தங்கம் போல் தகதகக்கும் வீடு..

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மேடை கலைஞர் தான் மதுரை முத்து. இவர் தொலைக்காட்சி சிரிப்புரையாளர் ஆவார். மேலும் இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

இவர் கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு, காமெடி ஜங்சன் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஊடாக பரந்து அறியப்பெற்றார். மேலும், இவர் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். 

இவர் லேகா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். ஆனால் லேகா கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் தனது 32வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை மறுமணம் செய்துகொண்டார். 


இந்த நிலையில், தற்போது சொந்த வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளார் மதுரை முத்து. இது தொடர்பில் நெகிழ்ச்சியான பேட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

அதன்படி, வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசைகளில் ஒன்று சொந்த வீடு கட்டுவது. அப்படி நல்லபடியாக முன்னேறி சம்பாதித்து வரும் மதுரை முத்துவும் அவருக்கென ஒரு சொந்த வீட்டை கட்டி உள்ளார்.

தனது வீட்டை கட்டுவதற்கு முன்பு பூமி பூஜை போடுவதில் இருந்து  படிபடியாக எவ்வாறு அந்த வீடு கட்டப்படுகிறது என்பதில் ஆரம்பித்து, இறுதியாக வீடு எப்படி கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்பது வரையில் அழகாக காட்டியுள்ளார்.

குறித்த காணொளியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், பல சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement