• Dec 26 2024

திடீரென விவாகரத்து செய்த பிரபல நட்சத்திர ஜோடி!... இது எல்லாம் ஒரு காரணமா ?

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆயுத எழுத்து’ என்ற தமிழ் படத்திலும் ஏராளமான ஹிந்தி படத்திலும் நடித்தவர் பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடியான தர்மேந்திரா - ஹேமாமாலினியின் மகள் இஷா தியோல்.


இஷா தியோல்  தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும் கூறியுள்ளார். 


இந்த நிலையில் இஷா தியோல் கடந்த 2012 ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு ஜோடிக்கும்  இரண்டு குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் திருமணம் ஆகி 12 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இஷா தியோல் தனது கணவரை பிரிய இருப்பதாகவும் விவாகரத்து செய்ய போவதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இது குறித்து இஷா தியோல் கூறிய போது ‘எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் நாங்கள் பரஸ்பரம் இணக்கமாக பிரிந்து செல்ல முடிவு செய்து இருக்கிறோம். எங்கள் குழந்தைகளின் நலன்கள் பாதிக்க கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். எங்கள் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்று ஆங்கில உலகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இஷால்  தியோல் எடுத்த இந்த திடீர்  முடிவு  சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement