• Jul 30 2026

பிரீத்தி முகுந்தனின் சினிமா என்ட்ரி இப்படியா நிகழ்ந்தது.? இதுவரை வெளிவராத உண்மை இதோ.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பிரீத்தி முகுந்தன் தனது சினிமா பயணம் குறித்து பகிர்ந்துள்ள உணர்ச்சிபூர்வமான தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. மாடலிங் துறையில் பயணித்து வந்தபோது தனக்கு கிடைத்த முதல் நடிப்பு வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மிகவும் தயங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரீத்தி முகுந்தன், “அப்போது எனக்கு 18 வயது தான். எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனக்குள் இருந்த பயம் காரணமாக ஆடிஷனுக்கு செல்ல தயங்கினேன். என்னால் நடிக்க முடியாது, என்னை நானே அவமானப்படுத்திக் கொள்வேன் என்ற எண்ணங்கள் இருந்தன.” எனக் கூறியுள்ளார்.


அந்த நேரத்தில் தனது பெற்றோர் அளித்த ஊக்கம் தான் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கல்லூரி விடுதிக்கே நேரில் வந்து, “ஏன் முயற்சி செய்யக்கூடாது? இது ஒரு தொடக்கம் தான். முயற்சி செய்து பார்..” என்று தன்னை உற்சாகப்படுத்தி ஆடிஷனுக்கு அனுப்பியதாக பிரீத்தி கூறியுள்ளார்.

முதல் ஆடிஷனில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த அனுபவம் சினிமா மீது தனக்கு இருந்த ஆர்வத்தை அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தருணம் தான் தனது நடிப்பு பயணத்தின் முதல் படியாக அமைந்ததாக கூறியுள்ளார்.

பெற்றோரின் நம்பிக்கையும், தன்னம்பிக்கையை வளர்த்த அந்த அனுபவமும் தான் இன்று சினிமாவில் முன்னேற உதவியதாக இருந்ததாக பிரீத்தி முகுந்தன் கூறியுள்ள நிலையில், அவரது இந்த பேட்டி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement