சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் ஏற்பட்ட உறவு தொடர்பான சர்ச்சைகள் மற்றும் குழந்தை விவகாரம் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர் என்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் கர்ப்பமாக்கி ஏமாற்றியதாகவும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் திரையுலகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றது.

இந்த நிலையில், தனது மகன் ராகா ரங்கராஜ் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதில், “எனது மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும், அன்புடனும் செய்து வருகிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் ராகாவின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழு பொறுப்புடன் துணை நிற்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தனது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவரது அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரின் கருத்துகளும் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் இந்த அறிவிப்பு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
Listen News!