• Dec 25 2024

கனா காணும் சீரியலில் நடிக்க இப்படி தான் வாய்ப்பு கிடைத்ததா? பலரும் அறிந்திடாத நடிகர் கார்த்திக் ராஜ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1988 ஜனவரி 21ல தான் கார்த்திக் ராஜா அவரு பிறந்திருக்கிறாரு. இவர்களுடைய குடும்பத்துல இவங்க அப்பா வந்து 30 வருஷமா தயாரிப்பு துறைல இருந்து இருக்காரு. அதுக்காகவே  கார்த்திக் ராஜா அவர்களுக்கும் திரைப்படத்துறைக்கு வரணும் அப்படிங்கற ஒரு ஆசை இருந்திருக்கு.அதனாலயே அவருக்கு கவனம் அதில் வந்திருக்கு.இவருக்கு முக்கியமா ஏதாவது ஒரு படத்துல ஒரு சிறந்த நடிகராக வர வேண்டும் என்பது ஆசை. அதுக்காகவே இப்ப வரைக்குமே போராடிட்டு இருக்காரு.

 கார்த்திக் ராஜ்  படிப்பினை முடித்ததற்கு அப்புறமா விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருந்தாரு.படிச்ஹசிக்கிட்டு இருக்கும் போது ஒரு வாய்ப்பு வந்துச்சு .விஜய் டிவியில்  கனா காணும் காலங்கள் இந்த சீரியலுக்கெல்லாம் வந்து ஆடிஷனில் கலந்துகொண்டார். அதில்  அவரு தேர்வு செய்யப்பட்டிருக்காரு அந்த தொடர்ல இவரு நடிச்சப்ப நல்ல வரவேற்பு கிடைச்சது . ரொம்ப அருமையா நடிச்சிருப்பாரு எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சது. அப்ப இருந்தே வந்து இவருடைய எதார்த்தமான நடிப்பு தான் எல்லாருக்கும் பிடிக்க வச்சது. ரொம்ப நல்லா பேசுவாரு அவர் பேசுற விஷயங்கள் எல்லோருக்கும் பழக்கப்பட்ட மாதிரியே இவர் பேசுவார் இதனாலேயே எல்லோருக்கும் இவரை பிடித்து விடும்.

இவ்வாறு நடிச்சு நல்ல வரவேற்பு கிடைத்தபோது அடுத்து இவருக்கு விஜய் டிவியில் ஆபீஸ் என்கின்ற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது இந்த சீரியலில் போட்ட காதல் காட்சிகள் எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்தது எல்லோருமே விரும்பிப் பார்த்தாங்க அந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்தது அதுக்கப்பறம் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் ,ஜோடி நம்பர் ஒன் . இதில் ஜெனிபர் ஓடு ஜோடியாக நடனம் ஆடி இருப்பார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது 465, பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல இந்த படங்கள் எல்லாம் பண்ணினாரு .அவ்வளவு தூரம் இவற்றிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை அடுத்து செம்பருத்தி சீரியல் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. எல்லாருமே கொண்டாடினார்கள். 

நெகட்டிவ் மீம்ஸ் வந்தாலும் அதற்கான பதிலடிகள் கொடுத்திருக்கிறார். மீம்ஸ் எல்லாம் பார்த்து ஒடஞ்சு போற ஆள் நான் கிடையாது, எனக்கு மட்டும்தான் தெரியும் இந்தளவு தூரம் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன் என்று பல விடயங்களை வெளிப்படையாக பேசி இருக்காரு இவருக்கு பல விருதுகளும் கிடைத்திருக்கு.

இதனைத் தொடர்ந்து மீண்டும் படமா திரைப்படத்தில் சொந்த முயற்சிகள் திரைப்படத்தில் நடிப்பதற்கு ரசிகர்களின் ஆதரவை வேண்டி ஒரு வீடியோ வினை வெளியிட்டு இருந்தார் . ரசிகர்களுக்கு நன்றி கூட தெரிவித்திருந்தார் அதன் பின்பு தற்போது கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் நல்ல வரவேற்பு இருக்கிறது எல்லோருமே விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவரை இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், திரையில் பார்க்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசை.


Advertisement

Advertisement