• Jul 03 2025

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா..? எத்தனை கோடி பட்ஜெட் தெரியுமா ?

Mathumitha / 19 hours ago

Advertisement

Listen News!

அஜித்தின் 64 ஆவது படத்தினை மீண்டும் குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவி இயக்கவுள்ளார். இந்த படத்தில் அஜித் 180 கோடி சம்பளம் கேட்பதால் ஐசரி கணேஷ் உட்பட பல தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதற்கு சற்று தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் குட் பேட் அக்லி வசூல் ரீதியில் தோல்வி படம் என்பதால் பலரும் அஜித்தின் சம்பளத்தை 130 கோடியாக குறைக்குமாறு பேச்சு வார்த்தைகள் மேற்கொண்டு வருகின்றனர். 


இந்த நிலையில் தற்போது படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் படம் 300 கோடி பட்ஜெட் என்பதால் இதை அவர் தாங்குவாரா எனும் ஒரு கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.


இதுமட்டுமல்லாமல் இப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாகவும் அவரது சம்பளம் மட்டுமே 20 கோடி வருவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement