• Dec 26 2024

நடிகை அசின் சினிமாவிலிருந்து விலகியதற்கு இது தான் காரணமா?- இப்படியொரு அரசியல் சூழ்ச்சி இருந்ததா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அசின். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய், அஜித் குமார், சூர்யா, கமல்ஹாசன் என அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்கள் கமிட் ஆகி நடித்தார்.

தமிழைத் தொடர்ந்து பாலிவூட்டிலும் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இந்த நிலையில் இவர் குறித்த ஒரு தகவல் வெளியாகி வருகின்றது. அதாவது அசின் சல்மான்கானுடன் இணைந்து ரெடி என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம்.இதன் சூட்டிங்கிற்காக பட குழு இலங்கை பயணித்தது. 


அந்த சமயத்தில் இலங்கையில் நடந்த போர் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவில் இருந்து யாரும் இலங்கைக்கு போகக்கூடாது, இலங்கையில் இருந்து யாரும் இந்தியாவுக்கு வரக்கூடாது என்ற பெரிய அரசியல் நடந்ததாம்.

ரெடி பட குழு படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது அசின் தான். அசினை இனி தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க கூடாது என சில அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். அசின் பாலிவுட் வாய்ப்புகளை நம்பி அப்போது அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் இலங்கை சென்றார். 


அதற்கு அடுத்து அசினுக்கு பாலிவுட்டில் தோல்விகள் தான் அதிகமாக கிடைத்தன.ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு திரும்பி விடலாம் என அசின் நினைத்தார். ஆனால் அவருக்கு இங்கே வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதில் ரொம்பவும் உறுதியாக இருந்து விட்டார்கள். விஜய் உடன் அவர் நடித்த காவலன் படத்திற்கும் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டது. இந்த அரசியலை புரிந்து கொண்ட அசின், சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது..

Advertisement

Advertisement