• Dec 26 2024

ஹனிமூனை ரொமான்டிக்காக கொண்டாட காதல் தேசத்திற்கு பறந்த கார்த்திகா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. அந்த காலகட்டத்தில் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டவர். இவருக்கு கார்த்திகா, துளசி என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். 


இதில் கார்த்திகா கோ என்னும் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து அன்னக்கொடி படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.தொடர்ந்து படவாய்ப்புக்கள் சரியாக அமையாததால் சினிமாவை விட்டு விலகினார்.


சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் பெற்றோருடன் இணைந்து ஹொட்டல் பிஸ்னஸை கவனிக்க ஆரம்பித்தார்.இந்த நிலையில் கார்த்திகாவுக்கு அண்மையில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது.கிலோ கணக்கில் கார்த்திகாவுக்கு ராதா நகை போட்டு கட்டிக்கொடுத்தார்.


 கார்த்திகாவும் ரோஹித்தும் தற்போது ஹனிமூனில் இருக்கிறார்கள். காதலர்களின் கனவு தேசம் என்று வர்ணிக்கப்படும் பாரிஸில் அவர்கள் தங்களது ஹனிமூனை கழித்து வருகிறார்கள். அங்கு இருக்கும் ஈஃபிள் டவர் உள்ளிட்ட பகுதிகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கார்த்திகா நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement