• Mar 06 2025

கல்பனாவின் தற்கொலை முயற்சிக்கு இது தான் காரணமா..? மகள் கூறிய உண்மை..

Mathumitha / 11 hours ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல பாடகி கல்பனா பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியவர்.இசை மூலம் பிரபலமான இவர் தற்போது மிகுந்த கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 


இவர் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டா பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவர் அளவுக்கதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரை முடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக கல்பனாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். 


தீவிர சிகிச்சையில் இருந்து இவர் தற்பொழுது மீண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இவர் குறித்த முடிவினை எடுப்பதற்கான காரணத்தினை கல்பனாவின் மகள் கூறியுள்ளார். அதாவது "என் அம்மாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நன்றாக இருக்கிறார். அவர் ஒரு பாடகி. மேலும் தனது பிஎச்டி, எல்எல்பி படிப்பையும் படித்து வருகிறார். இதனால் அவர் சரியாக தூக்கம் இல்லாமல் தவித்தார். தூக்கமின்மையை குணப்படுத்த, மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டார். மன அழுத்தம் காரணமாக, லேசான போதைப்பொருள் அளவு அதிகமாக இருந்தது; இது தற்கொலை முயற்சி அல்ல, தூக்கமின்மை மாத்திரையை அதிகமாக உட்கொண்டதுதான். தயவுசெய்து எந்த தவறான தகவலையும் பரப்பவோ அல்லது திரிக்கவோ வேண்டாம் " என ஊடகங்களிற்கு செய்தி வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement