• Jan 12 2025

சிம்ரனின் இடுப்பழகிற்கு ரகசியம் இதுதானா? அவரே சொன்ன சீக்ரெட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மும்பையில் பஞ்சாபி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். அதற்குப் பிறகு மாடலிங், சின்னத்திரை மீது தனது மீடியா பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு முதன் முதலில் சனம் ஹார்ஜாய் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமானார்.  முதல் படமே தோல்வி படமாக அமைந்தது.

ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என படிப்படியாக பிறமொழிப் படங்களில் நடித்தார். அதன் பிறகு தமிழில் முதல்முறையாக ஒன்ஸ்மோர் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார்.

இதன் பிறகு சிம்ரன் கனவுக்கன்னி ஆக வலம் வந்ததோடு தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து  நடித்தார். இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை ஆகவே மாறினார். அது மட்டும் இல்லாமல் 2 ஆயிரம் ஆண்டு காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகையாகவும் காணப்பட்டார்.

சிம்ரன் என்று சொன்னாலே அனைவரது நினைவுக்கு வருவது அவரது இடுப்பு தான். அவர் நடித்த எல்லா படங்களிலும் சிம்ரன் தனது இடுப்பை வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.


இந்த நிலையில், இடுப்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்ற கேள்வியை தொகுப்பாளினி ஒருவர் சிம்ரனிடம் கேட்க அதற்கான ரகசியத்தை கூறியுள்ளார்.

அதன்படி தினமும் இடுப்பை  150 முறை டிவிஸ்ட் செய்து கொண்டே இருக்கவேண்டுமாம். 150 முறை என மூன்று செட் பண்ண வேண்டுமாம் இதுதான் கண்டிப்பாக ஒர்க் ஆகும் என சொல்லியுள்ளார்.

Advertisement

Advertisement