• Jan 12 2025

கையெடுத்து கும்பிட்ட சிம்ரன்.. ஏன் தெரியுமா? இப்படியொரு பதிலை எதிர்பாக்கலையே..!!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கண்ணதிரே தோன்றினாள், ஜோடி, தமிழ் உள்ளிட்ட படங்களில் பிரசாந்துடன் இணைந்து நடித்து பிரபலம் ஆனவர் தான் சிம்ரன். தற்போது பல வருடங்களுக்குப் பிறகு அந்தகன் படத்தில் பிரசாந்துடன் இணைந்துள்ளார்.

90 ஆம் ஆண்டுகளில் பலரின் கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன் கடந்த சில ஆண்டுகளாகவே சீமராஜா, பேட்ட, கேப்டன், மகான் உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வந்தார். 

தற்போது அந்தகன் படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் லட்டுல சிம்ரன் எப்படி ஆப்பு வைக்கின்றார் என்று. அதாவது பிரசாந்துக்கு கண் தெரியுதா? இல்லையா? என சோதிக்கும் இடம் வேற லெவலில் காணப்பட்டுள்ளது. பேய் மாஸ்க் போட்டு சிம்ரன் உட்கார்ந்து இருக்கும் இடமும் அதன் பின்பு உண்மையாகவே பிரசாந்துக்கு கண் தெரியாமல் போவதற்காக அவர் காட்டும் வில்லத்தனமும் மிரட்டலாக காணப்பட்டது.


இந்த நிலையில், அந்தகன் படத்தின் ப்ரீமியர் ஷோ முடிந்ததும் செய்தியார்களை சந்தித்த சிம்ரன் கையெடுத்து கும்பிட்டு இந்த வாய்ப்பை தந்த தியாகராஜர் சாருக்கு மிகப்பெரிய நன்றி எனக் கூறியுள்ளார். மேலும் தன் மீது நம்பிக்கை வைத்து அவர் கொடுத்த கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement