• Dec 27 2024

ஒரு பெரிய நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. இஷா கோபிகர் சொன்ன திடுக் தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஒரு பெரிய நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை இஷா கோபிகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகை பொருத்தவரை நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற தொல்லை இருந்து வருவதாகவும் பல நடிகைகள் இந்த பிரச்சனையை சந்தித்து தான் முன்னேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பிரசாந்த் நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் உருவான ’காதல் கவிதை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இஷா கோபிகர். இதனை அடுத்து அவர் அரவிந்த் சாமியுடன் ’என் சுவாச காற்றே’ விஜய்யுடன் ’நெஞ்சினிலே’ பிரசாந்த் உடன் ’ஜோடி’ விஜயகாந்த் உடன் ’நரசிம்மா’ உட்பட சில தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இஷா கோபிகர் பேட்டி ஒன்றில் தெரிவித்த போது ’நான் 18 வயதாக இருக்கும் போதே என்னை ஒரு திரையுலக பிரபலம் படுக்கைக்கு அழைத்ததாகவும் அதே போல் 23 வயதில் ஒரு பெரிய நடிகர் என்னை தனியாக வந்து சந்திக்கும்படி அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

நடிகை இஷா கோபிகர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி  ஆகிய மொழிகளில் நடித்துள்ளதால் அவர் கூறும் அந்த உச்ச நடிகர் எந்த மொழியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இருப்பினும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் என்ற இந்த பிரச்சனையை சந்தித்துள்ளார் என்பது மட்டும் உறுதி ஆகி உள்ளது.

நடிகர்கள் மட்டுமின்றி நடிகர்களின் மேனேஜர்கள், இயக்குனர்களின் மேனேஜர்களும் தன்னை மோசமான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்றும், தவறான முறையில் தொட்டு அருவருப்பாக நடந்து கொள்வார்கள் என்றும், அவர்கள் எல்லாம் அற்பமானவர்கள் என்றும் இஷா கோபிகர் அந்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement