பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி கோபியை வாக்கிங் போவதற்கு அழைத்துக் கொண்டுள்ளார். கோபி ரெடியானதும் அங்கு வந்த ராதிகா, நான் அவரை கூட்டிச் செல்கின்றேன் என கோபியை இழுத்துச் செல்லுகின்றார்.
இதன் போது கோபியும் ராதிகாவும் வாக்கிங் செல்லும்போது, அங்கு வந்தவர்கள் வீட்டை காலி பண்ணிவிட்டு இப்போது பாக்கியா வீட்டிலா இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு ராதிகாவும் ஆமாம் என்று சொல்கின்றார். அந்த நேரத்தில் கோபியையும் விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறார்.
இதை தொடர்ந்து கோபி தன்னால் வேகமாக நடக்க முடியவில்லை நான் மெதுவாக வருகிறேன்.. நீ போய்விட்டு வா என்று சொல்கின்றார். அதன்படி ராதிகாவும் முன்னாடி செல்ல, அங்கு பாக்கியாவும் வருகிறார்..
இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து வாக்கிங் செல்கின்றார்கள். அங்கு வந்த ஈஸ்வரியும் கோபியுடன் நடந்து வரும் போது, இவர்கள் இருவரையும் பார்த்து, தனக்கு ராதிகா பாக்கியாவை மாற்றி விடுவாரோ என்று பயமாக இருக்கின்றது என்று கோபியிடம் சொல்லுகின்றார்.
அதன் பின்பு வீட்டுக்கு வந்த கோபியிடம் கணக்கில் டவுட் கேட்டு மையூ செய்து கொண்டிருக்க, இனியா அதை பார்த்து பொறாமை படுகின்றார். அதனால் கோபி அருகில் இருந்து பேச்சு கொடுக்கின்றார்.
இதனால் மையூ தான் உள்ளே சென்று படிப்பதாக சொல்லவும் இல்லை நானே சொல்லித் தருகிறேன் என்று கோபி சொல்ல, அங்கு வந்த ஈஸ்வரி நீ இனியாவுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திட்டுகின்றார்.
இதனால் ராதிகா நான் உனக்கு சொல்லித் தருகின்றேன் என்று மையூவை உள்ளே கூட்டிச் செல்கின்றார். அதன் பின்பு என்ன டவுட்டாக இருந்தாலும் என்னிடம் மட்டும் கேட்குமாறு மையூவுக்கு ராதிகா சொல்லுகிறார்..
அங்கு வந்த கோபியும் பாட்டிக்கு வயசாகிட்டு அதனால் தான் அப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று மையூவை சமாதானப்படுத்துகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!