சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணியும் மனோஜூம் 30 லட்சத்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க, உங்க அப்பா கிட்ட காசு கேட்கலாம் என்று மனோஜ் சொல்லுகின்றார். ஆனாலும் அவர் ஜெயிலில் இருக்கின்றார். அவரிடம் ஒரே கேட்க முடியாது என்று ரோகிணி மறுக்கின்றார்.
இதை தொடர்ந்து சிந்தாமணி கல்யாண ஓடர் எடுப்பதற்காக புதிய நபர் ஒருவரின் வீட்டுக்கு செல்கின்றார். அங்கு தான் மண்டபத்திற்கு பூ மாலை அலங்காரம் செய்வதாகவும், உங்களுடைய தங்கச்சியின் திருமணத்திற்கு எங்களுக்கு ஓடர் தருமாறும் கேட்கிறார்.
இவர் கதைத்துவிட்டு வெளியே வரும் போது மீனா அங்கே செல்கின்றார். உள்ளே சென்ற மீனா தான் நாளாந்தம் ஒவ்வொரு வீட்டுக்கும் பூ கொடுப்பதாகவும், உங்களுடைய வீட்டுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வருகின்றார்.
வெளியே வந்த மீனாவிடம் நான் கல்யாண ஓடர் எடுக்க வந்த விஷயம் தெரிஞ்சு நீயும் வந்திருக்கிறாயா? என்று கேட்க, மீனா மீண்டும் உள்ளே போய் தானும் திருமண ஆர்டர் செய்வதாகவும் அவரிடம் பேசிவிட்டு வருகின்றார்.
இதன் போது சிந்தாமனியிடம், நான் டெய்லி பூ வேணுமா? என்று கேட்கத்தான் வந்தேன். கல்யாணம் ஆர்டர் எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இப்போது நீங்கள் சொன்னதும் நானும் போய் பேசி விட்டு வந்தேன். இப்படியே எனக்கும் க்ளூ தாருங்கள். உங்களுக்கு கமிஷன் தருகின்றேன் என்று சொல்லிவிட்டு செல்கின்றார்.
இன்னொரு பக்கம் செல்வம் சவாரி இல்லை என்றதும் கார் டிரைவிங் பழக்குவதற்கு ஐடியா போடுகின்றார். முத்துவும் அது சரியான ஐடியா என சொல்கின்றார். ஆனால் அதற்கு ஆபீஸ் வேணுமே என்று பேசிக் கொண்டிருக்க, மீனா அங்கு வருகின்றார்.
முத்து இதைப்பற்றி சொல்ல, மீனாவும் நல்ல ஐடியா என்று சொல்லுகின்றார். அதன் பின்பு முத்து சொன்ன மாதிரி அந்த வீட்டுக்கு சென்றதாகவும் அவர் பார்ப்பதற்கு நல்லவர் போல இருப்பதாகவும் மீனா சொல்லுகின்றார்.
அதன் பின்பு வீட்டில் விஜயா அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, மனோஜ், ரோகிணியும் வருகின்றார்கள். இதன் போது காசு ரெடி பண்ணியாச்சா? அது மட்டும் இந்த வீட்டில் நிம்மதி இருக்காது.. அவமானப்பட்டு இருக்கணும் என்று சொல்லுகின்றார் விஜயா. ஆனாலும் இப்போதைக்கு அப்பாவிடம் கேட்க முடியாது, நான் ட்ரை பண்ணிக் கொண்டிருக்கின்றேன் என்று ரோகினி சொல்கின்றார்.
இதன் போது அங்க வந்த முத்து, நாங்களும் மனோஜை ஏமாற்றியவனை தான் தேடி அழைக்கின்றோம். மீனாவும் பூ கொடுப்பது போல பல இடங்களில் திரிகின்றார் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!